search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் எரிகள்"

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #ChennaiRain
    திருவள்ளூர்:

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

    தொடர்ந்து வரும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.


    சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    புழல் ஏரியில் 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 1058 மில்லியன் கன அடி உள்ளது. ஏரிக்கு 460 கனஅடி தண்ணீர் வருகிறது. 90 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கடந்த 19-ந்தேதி புழல் ஏரியில் 1005 மில்லியன் கன அடி இருந்தது. மழை காரணமாக தற்போது 2 நாட்களில் 53 மில்லியன் கனஅடி உயர்ந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கனஅடி. தற்போது 194 மி. கனஅடி தண்ணீர் உள்ளது.

    ஏரிக்கு 230 கனஅடி தண்ணீர் வருகிறது. 45 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் 363 மில்லியன் கன அடி பதிவானது. (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி) 266 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சோழவரம் ஏரியில் வெறும் 30 மி.கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்த கொள்ளளவு 1089 மி.கனஅடி) 69 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பருவ மழை மேலும் தீவிரம் அடையும் என்று கூறப்படுவதால் ஏரிகளின் நீர் மட்டம் வரும் நாட்களில் கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiRain
    ×